Posts Tagged ‘தவறு’

வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளும் வயதில்
நான் இருப்பதாக பலர் சொல்கிறார்கள்
இந்த வயது வரை வாழ்க்கையென்றால் என்னவென்றே
தெரியவில்லை,இதில் துணை வேறு அவசியமா?
இந்த நொடி வரை என் வாழ்க்கை துணையின்றி
நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
என் அழகான நாட்கள் எல்லாம் நொடிகளில்
நிகழ்வில் நடந்துக் கொண்டிருக்க
வரும் காலத்தில் சந்திக்கும் துணையைப்
பற்றி ஏன் நான் கவலைப் பட வேண்டும்.
ஒருவர் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும்
என்ற கட்டாயத்தை ஏற்படுத்திக் கொள்ள
நான் இன்றைய மனிதனில்லை…
என் வயது அன்பின் வயது
என் அன்பு எல்லோருக்கும் சொந்தமானது
உடலின் தேவையை வைத்து அன்பின்
ஆழத்தை கணக்கிடும் மனப்பாட மூளைக்களுக்கு
எப்படித் தெரியும்
என் அன்பின் வயதும் மனதும்
நானும் மனிதனென்பதால் என் தலையிலும்
உடலின் வேட்கையை அடிக்கடி கிளறி விடும்
இயற்கையின் இயல்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
என் மூலம் ஒரு உயிரை உண்டாக்க நினைக்கும்
இந்த இயற்கையோடு நானும் விளையாடிக் கொண்டுத்
தான் இருக்கிறேன்,தோற்று விடுவேன் என்று
தெரிந்தாலும் அது வரை விளையாடிக்
கொண்டிருப்பேன்.
மரணம் வரை வாழ்வது போல்…
என் அன்பின் ஆழத்தை உடலின்
சங்கமத்தில் தான் வெளிப்படுத்த முடியுமென்றால்
இத்தனை ஆண்டுகள் அன்பை வெளிபடுத்தத்
திரானியற்றவனாக அல்லவா ஆகி விடுகிறேன்.
நிச்சயம் அப்படியில்லை என்னை ஆணாக
நிருபிக்கவோ? இல்லை பெண்ணாக நிருபிக்கவோ?
தூண்டும்  உண்ர்வில் மிருகம் மட்டுமே
இருக்கிறது,
அன்பை எங்கே அங்குத் தேடுவது.
ஒரு ஆணாகவோ! ஒரு பெண்ணாகவோ
இருந்து அன்பை உணர்வது மிகவும் கடினம்
ஒரு உயிரினமாக இருந்து அன்பை உணர்வது
மிகவும் எளிமையாக இருப்பதால்
என்னை ஒரு உயிரினமாகவே நினைக்க
பழகிக் கொண்டு வருகிறேன்.
இடையில் பாலின ஈர்ப்பு குறுக்கிடாமல்
இல்லை.
அந்த நொடி எனக்குள் என்ன நிகழ்கிறதோ
அதை அனுபவித்து ஆனந்திக்கிறேன்
நொடிக்கொரு முறை நான் மாறிக் கொண்டுத்
தான் இருக்கிறேன்,ஒரு மல்லிகைப் பூவாக
என்னை உணர்கிறேன்.
பிரம்மாண்டமான சிகரமாக என் மேல்
பல உயிரினங்கள் வாழ்வதை என் மேல்
உணர முடிகிறது
இது துறவு அல்ல விருப்பம்,
பற்று,காதல்,நட்பு,காமம் இன்னும்
என்னவெல்லாமோ
உலகமல்ல இந்த பிரபஞ்சத்தையே
விரும்பும் முயற்சி……
இதில் நீ நான் நாம் என்ற பாகுபாடில்லை
எல்லாமே நானாக இருக்கையில்
எனக்கு துணையை எங்குத் தேடுவது
என் சிரிப்புக்கும் நானே ரசிகனாக இருக்கும்
பொழுது,எதைக் கொண்டாட எதை வசைப்பாட
தவறுகளும் திருத்தங்களூம் எனகுள்ளேயே
நடக்க வெளியில் தவறையோ திருத்தங்களையோ
தேடி அலைவதில் என்ன கிடைத்து விடப் போகிறது.
எத்தனை தேடினாலும் இறுதியில் என்னையே தான்
நான் கண்டுபிடிக்கிறேன், இதில் எந்த நானை என்
துணையாக தேர்வு செய்வது.
என்னை பாலின ஈர்ப்பில் மூழ்கடிக்கும் பொழுது
மட்டுமே உணர முடிகிறது
இந்த உடலுக்கு ஒரு உடல் தேவையென்று….
ஒரு உடலில் மட்டுமே முடிந்து விடக் கூடியதா
எனக்குள் இருக்கும் தேடல் என்று
எண்ணுகையில் தான் மீண்டும் அந்த ஈர்ப்பில்
இருந்து மீள முயற்சிக்கிறேன்
மீண்டும் மீண்டும் விழுந்து விழுந்து எழுந்தும்
தொடர்கிறது எனக்கான தேடல்……..
அன்பினால் மட்டுமே கண்டுபிடிக்க
இயலும் எனக்கான தேடலை


நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை
கடிகார முற்கள் கணித்ததில்லை
நாடிகளில் செல்லும் ரத்த
ஒட்டங்களே அதற்கு சாட்சி
வருத்தத்தின் விபரீதங்கள்
அறியாததினால் உன்னிடம்
பேசாத நாட்கள்
ஒட்டு மொத்த வருத்த்தின்
கடிதங்களும் என் இதயமுகவரிக்கு
வந்தது போல் ஓர் உணர்வு
சொற்களும் குத்து மென்று
இது வரை அறிந்ததில்லை
“மன்னிப்பு” என்று நீ முதலில்
சொல்லும் வரை…
நான் செய்த தவறுக்கு