Posts Tagged ‘கண்ணீர்’

 
 
 
 
 
 
 
 
 
உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
எத்தனை முயற்சி எடுக்கிறாய்
நான் வீட்டிற்குள் வரும் நேரம்
தான் உனக்கு மாவு அரைப்பது
ஞாபகத்திற்கு வரும்
நான் வெளியில் போகும் பொழுது
உனக்கு ஊற வைத்த துணி
ஞாபகத்திற்கு வரும்
நான் பேசும் பொழுது உன்
காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில்
இருந்து ஒலி கேட்கும்
நான் விடுமுறை என்றால்
அப்பொழுது தான் உனக்கு
தலைவலி ஞாபகத்திற்கு வரும்.
இப்படி நமக்கான தனிமையெல்லாம்
சென்றுக் கொண்டே இருக்கிறது.
உள்ளுக்குள் உன் அருகாமையை
எண்ணி புலம்பும் ஒரு உயிர் இருப்பதை
ஏன் உன்னால் உணர முடியவில்லை.
என் பார்வைக்கருகில், அருகாமையில்
பேசிக் கொண்டிருக்க உனக்கு விருப்பமில்லையா?
என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன்
அதுவும் மனம் தாங்காமல்
அந்நொடி நீ சிந்திய கண்ணீர் சொன்னது
உன்னுடைய அத்தனை அன்பையும்…

glittering_girl_animation_1.gif

தலைவணங்குகிறது

கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது………
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று…………………..

அனுமதிப்பதில்லை

கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய……………..

என்னைப் பார்த்து நீ……

துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ……..
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ……
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது