அலைப் பேசி காலம் நம் நட்பறிந்ததில்லை
தொலைப் பேசித் தொடர்பும் நம் நட்பில் இல்லை
விரல் பேசும் நாகரீகம் நம் நட்புக்கு தேவையில்லை
மொழி பேசும் உன் விழி வார்த்தை
என்றும் நம் நட்புக்கு போதும்
கல்லூரிக் காலம் அது நம் நட்பின்
மழலைக் காலம் அறிமுகப் பொய்களை
எல்லாம் அலசிப் பார்த்து அன்பறியும்
காலம்.
பிரம்மிப்பாய் தோன்றும் புற அழகில்
சிக்கிக் கொள்ளாமல் சிதையாமல்
சரித்திரம் சொல்லும் அக அழகின்
ஆழம் செல்ல முயற்சித்த காலம்
தொட்டுக் கொள்ளாமலே உணர்ந்த
தொடுதலை விட்டு விடாமல்
துரத்திக் கொண்டேப் போய்
வாழ்வின் இறுதி வரை தொடர
நினைத்த காலம்
அழகியல் அன்பியல் இரண்டிற்கும்
இடையில் சிக்கிக் கொண்டு
குழம்பி விடாமல் நட்பின்
பிடியைப் பற்றி இரண்டையுமே
தெளிவாய் உணர்ந்து உணர்வுகளை
பக்குவபடுத்திய காலம்
நம் நட்புக் காலம்

பின்னூட்டமொன்றை இடுக