‘ரோஜா’ பகுப்புக்கான தொகுப்பு

இது என்ன புது உணர்வு எதைக் கொடுப்பது நான்… நீ என்னிடம் எடுத்துச் சென்றது திரும்பப் பெற முடியாத உணர்வுகள் அல்லவா… அப்படியிருக்க என்னிடம் நீ எதைக் கேட்கிறாய் பெண்ணே! கொடுத்த சில பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் நான் கொடுத்துவிட்டேன்… இத்துடன் என்னை மறந்துவிடு என்கிறாயே…. என்னிடம் அன்று நீ பொருட்களை மட்டும் தானா பெற்றாய்… என்னை விட்டு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறாயே… மனம் என்ன காதலின் விருந்தாளியா? ஒவ்வொரு முறையும் [...]

உங்களுக்கு என்னைத் தவிர உலகத்தில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாதா? கோபமாகக் கேட்டாய் நீ… பெண்ணே! உலகத்தை விட்டு வெளியில் வந்துப் பார்த்தால் தான் உலகம் தெரியுமாம் என் உலகமான உன்னையோ நான் உன்னிலிருந்தே பார்க்கிறேன் எனக்கு உன்னைத் தவிர வேறெதுவும் தெரியவில்லையடி நான் என்ன செய்ய…? என் முதல் பசியை ஆற்றிய தாய்பாலின் ஒரு துளியிலிருந்து வந்ததடி இந்த உணர்வு என் தாயைத் தவிர வேறெவரையும் காண சகியாத நாட்கள் கண்ட மனிதர்களிடமும் தாயைக் காணத் [...]

அது ஒரு காதல் தருணம் மனம் எங்கிருக்கிறது என என் உயிரின் ஒவ்வொரு துளியும் ஆராய்ந்துக் கொண்டிருக்க… அது உன்னிடம் இருப்பதாக என் உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுக்கள் ஒவ்வொன்றும் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்தன என் ஆன்மாவின் இருக்கையான இந்த உடலிலும்,உயிரிலும் ஒரே சமயத்தில் மின்சாரம் பாய்ந்து என் ஒட்டு மொத்த உணர்ச்சியையும் உன்னை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தன உன்னைப் பார்க்கத் துடிக்கும் உணர்வும் உன்னைப் பார்க்க மறுக்கும் உணர்வும் எனக்குள்ளேயே என்னை [...]

                    அது ஒன்றும் பேருந்து நிறுத்தமல்ல பேருந்து நிலையம்… அன்று நாம் ஒவ்வொரு நகரும் பேருந்தில் இருந்தும் நின்றிருக்கும் பேருந்துக்கு மாறி மாறி அமர்ந்ததிலேயே நம் காதல் பொழுது சென்றுக் கொண்டிருந்தது… சற்றே சலித்துக் கொண்ட நீ போதும் இனி என்னால் முடியாது என்றாய்… எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது எல்லோரும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றாய்… பார்க்கட்டுமே [...]

                  உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று எத்தனை முயற்சி எடுக்கிறாய் நான் வீட்டிற்குள் வரும் நேரம் தான் உனக்கு மாவு அரைப்பது ஞாபகத்திற்கு வரும் நான் வெளியில் போகும் பொழுது உனக்கு ஊற வைத்த துணி ஞாபகத்திற்கு வரும் நான் பேசும் பொழுது உன் காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில் இருந்து ஒலி கேட்கும் நான் விடுமுறை என்றால் அப்பொழுது தான் உனக்கு தலைவலி ஞாபகத்திற்கு வரும். [...]

                நீ கேட்பதற்காகவே வைத்த என் அலைப்பேசியின் ஒலி நாதத்தை உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்… நீ மட்டும் இன்னும் கேட்கவில்லை தவறாக என் எண்ணுக்கு அழைக்கும் நபர்கள் கூட சரியாக கேட்கும் என் அலை நாதத்தை நீ மட்டும் இன்னும் ஒரு முறைக் கூட கேட்காதது வருத்தம் தான்… என்றேனும் நீ என் அலைப்பேசி எண்ணுக்கு அழைக்கும் பொழுது இந்த ஒலி நாதத்தை நீ நிறைய [...]

வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளும் வயதில் நான் இருப்பதாக பலர் சொல்கிறார்கள் இந்த வயது வரை வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியவில்லை,இதில் துணை வேறு அவசியமா? இந்த நொடி வரை என் வாழ்க்கை துணையின்றி நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. என் அழகான நாட்கள் எல்லாம் நொடிகளில் நிகழ்வில் நடந்துக் கொண்டிருக்க வரும் காலத்தில் சந்திக்கும் துணையைப் பற்றி ஏன் நான் கவலைப் பட வேண்டும். ஒருவர் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்திக் [...]

பார்த்துக் கொண்டே  இருக்க நான் என்ன தொலைக்காட்சியா? என் பார்வையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்டாய் நீ ஆமாமென்றென்…! என்னது நான் தொலைகாட்சியா? எப்படி? ஆமாம் நான் மட்டுமே பார்க்கும் தொலைகாட்சி… என் ஒவ்வொரு செயலுக்கும் நீ ஒவ்வொரு அலைவரிசைக்கு மாறுகிறாய் என்ன மற்றவர் பார்க்கும் தொலைகாட்சியில் ஒரு அலைவரிசையில் ஒரு நேரத்தில் ஒரு நிகழ்சியை மட்டுமே பார்க்கலாம். உன்னிலோ நீ சிரிக்கிறாய் என்று பார்க்கையில் முறைக்கிறாய் முறைக்கிறாய் என்று அலைவரிசையை மாற்றுகையில் சிணுங்குகிறாய் விளக்கமாக [...]

இறைவனிடம் என்ன வேண்டினாய் என்றாய்? நீ மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினேன். ஏன்? என்றாய் என் உலகமே நீ தானே உலகம் நன்றாக இருந்தால் தானே நான் நன்றாக இருக்க முடியும் என் மேல் அவ்வளவு ஆசையா? என்றாய் ஆமாம்… எவ்வளவு? என் உயிரளவு உயிரளவா? என்னுடலில் ஒட்டியிருக்கும் உயிரளவு  உன் மேல் ஆசை எனக்கு  என்றதும் என் உயிரளவை கணக்கிடும் இதய ஆசனத்தில் சாய்ந்தாய் ஒரு நொடி என் உயிரளவு அணுவிலிருந்து ஆகாயமானது.

நான் எப்படியோ?

Posted: மார்ச் 7, 2010 in ரோஜா

இரு கைகளையும் இதயத்திற்கு நேரே குவித்து வைத்து பத்து விரல்களையும் ஒன்றாகத் தெரியும்படி இணைத்து நீ கும்பிட்ட அழகில் அந்த கடவுளே கல்லாகி நிற்கிறானென்றால் நான் எப்படியோ?