உன்னை முத்தமிட எனக்கு விருப்பமில்லை என் காதலை சத்தமிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை தொடுதலுக்காக மட்டும் காதலில்லை என்பதில் என் மனம் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை மறதியை வெல்லும் ஆற்றல் உன் நினைவுக்கு மட்டும் தானடி உள்ளது சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப் போன அத்தனை வார்த்தைகளும் உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறது உன் கண்கள் மட்டும் ஏனோ அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது எது வரை …என்பதில் தான் எனக்கும் உனக்கும் நடக்கிறது ஒரு காதல் [...]
‘முத்தம்’ பகுப்புக்கான தொகுப்பு
ஒரு முத்தம்
Posted: ஜூன் 26, 2007 in முத்தம், ரோஜாகுறிச்சொற்கள்:உண்மை, கண்கள், கோபம், தலைக்கவிழ்ந்தாய், நான், பொய், முத்தம், மௌனம்
உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்………….. உன்னீரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்………………. உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன்எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத் தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்…………..








