கொஞ்ச நேரமே பார்க்க நேர்ந்தாலும் அந்த அரிதான நொடிகளை மனம் அழகாய் ரசிக்கப் பழகிவிட்டது சந்திப்புகளில் மட்டுமே திருப்தியடைந்த மனம் இப்பொழுதெல்லாம் சந்திப்பில்லாத கணங்களிலும் நட்பால் திருப்தியடைகிறது பார்த்து பார்த்து பழகிய வயது போய் ,பார்வைகளின்றியும் நட்பின் பகிர்தலை உணர்த்தும் உனதான என் நட்பில்… கொஞ்சம் பக்குவம் தெரிந்தாலும் அழும் குழந்தையாகவே என் மனம் கேட்கிறது. இப்பொழுதும் திரும்பவும் சந்திக்கும் தருணங்களை… இது நட்பின் குழந்தைதனமா? இல்லை குழந்தைத் தனம் தான் நட்பா?
‘நட்பு’ பகுப்புக்கான தொகுப்பு
குழந்தைத் தனம் தான் நட்பா?
Posted: மே 1, 2010 in நட்புகுறிச்சொற்கள்:குழந்தை, குழந்தைத் தனம், நட்பா?
பிரிவு என்பது துயரமல்ல…. !
Posted: மே 1, 2010 in நட்புகுறிச்சொற்கள்:இருளை, நெடுந்தூரப் பயணம், பயணம், பிரிவு
உங்களின் நட்பு உனக்காய் மாறும் தருணங்களில் பகிர்தலில் நிகழ்ந்த பழக்கத்தின் நிழல்களில்… இளைப்பாரிக் கொள்ள இருவருமே நினைப்போம் மாறப் போகும் காலத்தின் பிரம்மாண்டமான வெளியில் அன்பின் சிறு ஓளியில் இருளை பற்றிய அச்சமின்றி நட்பின் கைகளைப் பற்றி நெடுந்தூரப் பயணம் செய்வோம் எதேனும் ஒரு இடத்தில் உன்னாலோ அல்லது என்னாலோ பயணத்தை தொடர இயலாமல் போகலாம். உள்ளத்தில் துப்பறியும் நோக்கமின்றி நட்பறியும் எண்ணத்தில் பழகிய உறவில் நீயின்றியோ,அல்லது நானின்றியோ நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் [...]
அன்பறியும் காலம்…
Posted: பெப்ரவரி 25, 2010 in நட்பு, ரோஜாகுறிச்சொற்கள்:அன்பியல், அலைப் பேசி, அழகியல், காலம்., நட்பு, நட்புக் காலம், நம் நட்புக் காலம், நாகரீகம், மொழி, வார்த்தை, விழி
அலைப் பேசி காலம் நம் நட்பறிந்ததில்லை தொலைப் பேசித் தொடர்பும் நம் நட்பில் இல்லை விரல் பேசும் நாகரீகம் நம் நட்புக்கு தேவையில்லை மொழி பேசும் உன் விழி வார்த்தை என்றும் நம் நட்புக்கு போதும் கல்லூரிக் காலம் அது நம் நட்பின் மழலைக் காலம் அறிமுகப் பொய்களை எல்லாம் அலசிப் பார்த்து அன்பறியும் காலம். பிரம்மிப்பாய் தோன்றும் புற அழகில் சிக்கிக் கொள்ளாமல் சிதையாமல் சரித்திரம் சொல்லும் அக அழகின் ஆழம் செல்ல முயற்சித்த காலம் தொட்டுக் கொள்ளாமலே உணர்ந்த தொடுதலை விட்டு விடாமல் துரத்திக் கொண்டேப் போய் வாழ்வின் இறுதி வரை தொடர நினைத்த காலம் அழகியல் அன்பியல் இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு [...]
நட்பின் மௌனங்கள்
Posted: ஜூலை 3, 2008 in நட்புகுறிச்சொற்கள்:அலை, இசை, ஒலி, நட்பின் மௌனங்கள், நட்பு, நாகரிகம், மௌனங்கள், வலிமை, வலிமையுண்டோ, வார்த்தை, வீண்
நட்புக்கு நாகரிகம் இருக்குமானால் அது உன்னிடம் தோற்றுவிடும் பேச முயன்றும் உதடுகள் திறவாத நொடிகளில் நெஞ்சினுள்ளே லேசான வலியை உணரும் பொழுதெல்லாம் காற்றை வெறுத்ததுண்டு என் நெஞ்சினுள்ள வார்த்தையை ஏன் ஒலி அலைகளாக மாற்றவில்லையென்று… காற்று கூட வெளி வார்த்தைக்குத் தான் மதிப்பளிக்கிறது மௌனத்தை இசைக்கும் அசைவு காற்றில் இல்லையா? உன் காதில் இல்லையா? நட்பின் மௌனங்கள் உணரப்படாதபொழுது வார்த்தைகளுக்கு மட்டும் வலிமையுண்டோ! வீண்…
பூக்களின் பாதுகாப்பு
Posted: ஜூலை 3, 2008 in நட்புகுறிச்சொற்கள்:இதயமுகவரி, சொல்லும் வரை..., தவறு, நட்பு, நாடி, நாட்கள், மன்னிப்பு, முற்கள், வருத்த்தின்
நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை கடிகார முற்கள் கணித்ததில்லை நாடிகளில் செல்லும் ரத்த ஒட்டங்களே அதற்கு சாட்சி வருத்தத்தின் விபரீதங்கள் அறியாததினால் உன்னிடம் பேசாத நாட்கள் ஒட்டு மொத்த வருத்த்தின் கடிதங்களும் என் இதயமுகவரிக்கு வந்தது போல் ஓர் உணர்வு சொற்களும் குத்து மென்று இது வரை அறிந்ததில்லை “மன்னிப்பு” என்று நீ முதலில் சொல்லும் வரை… நான் செய்த தவறுக்கு
நெஞ்சில் ஈரத்து நினைவுடனே……..
Posted: ஜூன் 5, 2008 in நட்புகுறிச்சொற்கள்:உணர்வு, உறவு, உளறல், கா, காலம்., சண்டை, சிறுமி, சிலுமிசம், சிலேட்டு, சீ', சூ, தொட்டு, தோழி, நகம், நட்பு, நாள், நேரம், பல்பம், பள்ளி, பழக்கம், பெயர், போ
உறவு உணர்வு என்று உளறிக் கொண்டிருந்தாலும் உறவாகாமல் உணராமல் என்னுள் ஓர் உளறல் என் நகம் நனைக்கும் வயதிலிருந்து சிலேட்டு பல்பம் வைத்தெழுதியா நட்பைக் கற்றேன். என்னைப் பார்த்து நட்பென்றால் உனக்குத் தெரியுமா? என்று ஒவ்வொருவர் கேட்கும் பொழுதும் யோசித்ததுண்டு என்ன தான் சண்டைப் போட்டுக்கொண்டாலும் என் பள்ளி நண்பன் எனக்கு இன்றும் சுகமளித்துக் கொண்டே இருக்கிறான் என் மனதில் மௌன நினைவகளோடு நான் எப்பொழுதும் சிலுமிசம் செய்யும் பக்கத்து வீட்டுச் சிறுமி ‘அ.. ஆ [...]
நெஞ்சம் மறக்கலையே…
Posted: மே 27, 2008 in நட்புகுறிச்சொற்கள்:அனுபவம், காலங்கள், காலோடு, சகோதிரி, செல்கையிலே, நினைவு, பழைமை, வலி, வழி
காலங்கள் செல்லும் வழி என் காலோடு நான் செல்கையிலே வீதி மட்டும் வந்த உன் நட்பு என் விழியை நனைத்துப் போகையிலே கால் வலியும் தெரியலையே கன்னி உந்தன் நினைவினிலே முகம் சிவக்க சிரித்தநாட்கள் என் ஆயுள் முழுதும் என் நெஞ்சினிலே பழுகும் பொழுதும் படித்த உன் மனது பிரியும் பொழுதும் நெஞ்சம் மறக்கலையே பாசமென்றோ! நேசமென்றோ! பல பெயர் சொல்லலாம் ஆனால் நட்பொன்றே நம் உறவை அழகாகச் சொல்லும் வார்த்தை! இல்லை, வாசகம்! உன் பந்தம் [...]
எனை நட்பில் வென்றாயே!
Posted: பெப்ரவரி 4, 2008 in நட்புகுறிச்சொற்கள்:குழப்பம், நட்பு, பழகலையா, புழுக்கம், மௌனம், வார்த்தை
ஒரே ஒரு வார்த்தைப் பேசி விட எண்ணி ஒரு மணி நேரம் எனக்குள்பேசிக் கொண்டிருந்தேன் நட்பு எனக்குள் மட்டும் தானா உனக்குள் இல்லையா நான் ஏன் முதலில் பேச வேண்டுமென்று பழகிய நாளை அதில் இளகிய மனதை நீ நோகாடித்தது நினைவில்லையா? நெஞ்சுக்குள் ஏனோ திடீரென்று ஒரு புழுக்கம் ஏனோ மனக் குழப்பம் நமக்குள் என்ன தான் நிகழ்ந்தது உனை எனக்குப் புரியலையா? எனை உனக்குப் புரியலையா? இருந்தும் ஏன் மௌனம் சொல்லுக்கு நம் நட்பு பழகலையா [...]
எண்ணிலா ஆசைகள்
Posted: செப்டம்பர் 27, 2007 in நட்பு, ரோஜாகுறிச்சொற்கள்:அம்மா, ஆசை, எண்ணம், தாய் மடி, முதல் வலி, ரோஜா, வரவேற்று, வலி
காற்றில் வந்து காதில் வீழ்ந்த முதல் சொல்லைப் பல் முளைக்கும் முன் சொல்ல ஆசைப்பட்டு எண்ணிலா எண்ணம் வளர்த்தேன் அந்த எண்ணத்தில் தான் அம்மா என்றுரைத்தேன் பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம் நண்பனாக்கி தூக்கத்திலும் துள்ளி குதித்தேன் துவண்டு விழுந்தாலும் தூக்கிவிடும் அன்பை ரசித்தேன்……………… புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது பல பக்கம் ரசித்தேன்…………. அந்த பக்கத்தில் பார்த்த புது படத்தை ரசித்தேன்……… அழுது கொண்டு பள்ளிச் செல்லும் நேரம் சனி ஞாயிற்றை ரசித்தேன்……………… இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று பள்ளி நாட்களுக்கு துடித்தேன் விண்மீன்களை எல்லாம் கைக்குள் அடக்க வேண்டுமென கல்லூரிக்குள் காலடி வைக்கும் பொழுது நினைத்தேன் காலடி பதிக்கும் முன்னரே காதலின் அடியை அறிய ஆசைப்பட்டேன் காதலியை காதலிக்க ஆசை அவளும் நம்மை மட்டுமே காதலிக்க ஆசை கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை தேர்வில் காதல் அலீகளின் வெற்றியை பார்த்ததும் காதலை விட்டு ஓட ஆசை அன்பை விட்டு அழகுக்கு ஆசை அழகும் அழிந்துவிடுமோ! என்றெண்ணி புகழுக்கு ஆசை புகழுக்காக தொடர்ந்த படிப்பை தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை பார்வையில் பணம் பார்க்க ஆசை பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை காமத்திற்கு ஆசை – அதனோடு கவுரவ த்திற்கு ஆசை திருமணத்தோடு திருடிவிட்ட ஆசைகளை எல்லாம் திருப்பிக் கொடுக்க ஆசை நம் போல் ஒரு பிள்ளை நமக்குப் பிறக்க ஆசை நமக்காக துடிக்கும் ஓர் உள்ளத்தை நண்பனாக்க ஆசை நகம் நனைக்கும் வயதில் நட்பை உதைத்த தோசம் நரை வந்த பின்னும் நண்பனைத் தேடும் [...]








