இது என்ன புது உணர்வு எதைக் கொடுப்பது நான்… நீ என்னிடம் எடுத்துச் சென்றது திரும்பப் பெற முடியாத உணர்வுகள் அல்லவா… அப்படியிருக்க என்னிடம் நீ எதைக் கேட்கிறாய் பெண்ணே! கொடுத்த சில பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் நான் கொடுத்துவிட்டேன்… இத்துடன் என்னை மறந்துவிடு என்கிறாயே…. என்னிடம் அன்று நீ பொருட்களை மட்டும் தானா பெற்றாய்… என்னை விட்டு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறாயே… மனம் என்ன காதலின் விருந்தாளியா? ஒவ்வொரு முறையும் [...]
நவம்பர், 2011 க்கான தொகுப்பு
மனம் என்ன காதலின் விருந்தாளியா?
Posted: நவம்பர் 24, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:அன்பியல், காதல், சோகம், பிரிவு
3
விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது
Posted: நவம்பர் 22, 2011 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:பயணம், வல்லரசு, விறகுகள்
விதைகளை விற்று விறகுகள் வாங்குகிறோம் சதைகளை வளர்க்க எலும்பினைத் தேய்கிறோம் விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது மலரனில் தேய்தா முற்களைக் கூராக்குவது இந்திர வலிமையால் இயக்கத்தை இழக்கிறோம் தொழில் மூலப்பொருளை பலர் ரத்தத்தில் எடுக்கிறோம் பணம் பார்க்கும் பன்னாட்டு வாணிபத்தில் மனிதத்தை தொலைக்கிறோம் இந்நாட்டு பொருளை ஏளனம் செய்துவிட்டு வல்லரசை நோக்கி பயணிக்கிறோம் தொடரட்டும் பயணம் கால்கள் செயலிழக்கும் வழி விபரிதங்களால்…..








