என் பார்வைக்கருகில்

Posted: அக்டோபர் 14, 2011 in காதல், ரோஜா
குறிச்சொற்கள்:, , , , , , ,

 
 
 
 
 
 
 
 
 
உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
எத்தனை முயற்சி எடுக்கிறாய்
நான் வீட்டிற்குள் வரும் நேரம்
தான் உனக்கு மாவு அரைப்பது
ஞாபகத்திற்கு வரும்
நான் வெளியில் போகும் பொழுது
உனக்கு ஊற வைத்த துணி
ஞாபகத்திற்கு வரும்
நான் பேசும் பொழுது உன்
காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில்
இருந்து ஒலி கேட்கும்
நான் விடுமுறை என்றால்
அப்பொழுது தான் உனக்கு
தலைவலி ஞாபகத்திற்கு வரும்.
இப்படி நமக்கான தனிமையெல்லாம்
சென்றுக் கொண்டே இருக்கிறது.
உள்ளுக்குள் உன் அருகாமையை
எண்ணி புலம்பும் ஒரு உயிர் இருப்பதை
ஏன் உன்னால் உணர முடியவில்லை.
என் பார்வைக்கருகில், அருகாமையில்
பேசிக் கொண்டிருக்க உனக்கு விருப்பமில்லையா?
என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன்
அதுவும் மனம் தாங்காமல்
அந்நொடி நீ சிந்திய கண்ணீர் சொன்னது
உன்னுடைய அத்தனை அன்பையும்…
மறுமொழிகள்
  1. yazhini says:

    உணர்வுகளை தெளியச்செய்யும் கவிதை, ஒரு காதலனின் ஏக்கமும், காதலியின் காதல் தாக்கமும் இதமாய் சொல்லப்பட்டிருக்கிறது. கவிஞர் காதலில் கரை கண்டுவிட்டார் போலும்……………..

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s