தமிழ் ராஜா எழுதியவை | பெப்ரவரி 13, 2009

துளித் துளியாய் மரணப்பிறப்பு

துளித் துளியாய் மரணப் பிறப்புத்
தரும் காதலே தயவு செய்து
என்னிடம் இப்பொழுது வராதே
இரவில் தூக்கமின்றி இருக்கவோ!
எனக்கு நானே பேசிக் கொள்ளவோ!
பசியிருந்தும் உண்ண மறக்கவோ!
நினைவுகளற்ற நினைவில் இருக்கவோ!
என்னை நானே மறந்து துறக்கவோ!
நான் இன்னும் பழகிக் கொள்ளவில்லை
அதுவும் ஒரு பெண்ணை மனத்துக்குள்ளே
வைக்கும் அளவு என் மனம்                                                                                                                                                                      இன்னும் விரி வடையவில்லை
பிறர் சொன்னதை மனனம் செய்தே
பழக்கப் பட்டவன் நான்
என் பள்ளி பருவம் மனதிற்குள்
அப்படியே இருக்கிறது
 ஓரளவு நல்ல பேரை போலியாக
தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்
அதை நீ  இப்பொழுது கெடுத்து விடாதே
நான் தான் மற்ற எல்லா வற்றையும்
செய்கிறேனே உன்னை தவிர
ஒரு பெண்ணின் நினைவுகளை
மட்டும் என் மனத்திற்குள் போட்டு
குழப்பி விடாதே!                                                                                                                                                                                              தயவு காட்டு
இவ்வளவு கெஞ்சியும் காதல்
என்னைப் பார்த்து சிரித்தது
அடேய் மடையா! எப்பொழுது
உன்னால் என்னிடம் பேச
முடிகிறதோ!
அப்பொழுதே உன்னை நான்
பிடித்துக் கொண்டேன்
அழாதே! கண்ணை துடைத்துக் கொள்
காதலிப்பவனால் தான் என்னிடம்
பேச முடியும்
இனி வேறு ஒன்றும் செய்ய முடியாது
என்றது…


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்