நட்புக்கு நாகரிகம் இருக்குமானால்
அது உன்னிடம் தோற்றுவிடும்
பேச முயன்றும் உதடுகள்
திறவாத நொடிகளில்
நெஞ்சினுள்ளே லேசான
வலியை உணரும் பொழுதெல்லாம்
காற்றை வெறுத்ததுண்டு
என் நெஞ்சினுள்ள வார்த்தையை
ஏன் ஒலி அலைகளாக
மாற்றவில்லையென்று…
காற்று கூட வெளி
வார்த்தைக்குத் தான்
மதிப்பளிக்கிறது
மௌனத்தை இசைக்கும் அசைவு
காற்றில் இல்லையா?
உன் காதில் இல்லையா?
நட்பின் மௌனங்கள் உணரப்படாதபொழுது
வார்த்தைகளுக்கு மட்டும்
வலிமையுண்டோ! வீண்…










//நட்பின் மௌனங்கள் உணரப்படாதபொழுது
வார்த்தைகளுக்கு மட்டும்
வலிமையுண்டோ! வீண்…//
அருமையாக இருந்தது இந்த வரிகள்.
அன்புடன் அருணா
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.அருணா
அன்புடன் தமிழ்ராஜா
very nice one
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி உமா