கவிதை எழுத வருமா !

Posted: ஜூலை 3, 2008 in நான் பதிவு செய்ய
குறிச்சொற்கள்:, , , ,

கவிதை எழுத வருமா !
என் மனது முழு அமைதி
இன்று பெருமா!
சோர்வில் மிதந்து கிடக்கும்
என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா!
காற்று சுகமிருந்தால் உள்ளே
சுவாசத் தடங்களிருக்கு
சுவாசம் ஒழுங்கடைந்தால்
வெளியே காற்று அடங்கி இருக்கு
மலர்ந்த கனவுக்கெல்லாம் என்
மனம் வாடகை கேட்டிருக்கு
இன்று மனமே வாடகையாய்
கனவில் புழூங்கியிருக்கு……….
தூக்கம் எனக்கிருந்தால்
இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை
ஏட்டில் கிறுக்குவதால் என்மனம்
தூக்கம் கொண்டதில்லை
துக்கம் எனக்கிருந்தால் அதை
ஏட்டில் இறக்கியிருப்பேன்
மன வாட்டம் போக்கியிருப்பேன்
விழி தூக்கம் கொண்டிருப்பேன்
துக்கமில்லை தூக்கமில்லை
எதுவுமின்றி நான் சோர்ந்து கிடக்கிறேன்
நெஞ்சம் வேர்த்துக் கிடக்கிறேன்
கண்ணீர் கோர்த்து கிடக்கிறேன்
கவிதையில் பூத்துக் கிடக்கிறேன்
சோற்று பருக்கைத்தனை வாயில்
போட்டுக் கொண்டப் பொழுது
உழவன் வாட்டம் என் மனதில்
தாக்கம் கொள்கிறதே
வாழ்வு முழுவதிலும்
மன புழுக்கம் எதுவுமின்றி
வாழ நினைக்கையில்
வருத்தம் வாசல் முன் வருதே
தேடி திரிகையில் அன்பே
முதலென முடிவும் தெரியுதே
காத்துக் கிடக்கிறேன் அன்பினை
சுவாசம் நுழைக்ககவே!
அதில் இன்பம் தெரியவே
ஏட்டில் கிறுக்கல் நிறையுதே
சொல்ல நினைத்ததை ஏட்டில்
கிறுக்கிப் பார்க்கிறேன்
சோர்வு எனக்கிருந்தால் அதனுடனே
கொட்டித் தீர்க்கிறேன்–
நிறைவில் வருவதையே கவிதை !
இன்பக்கவிதை!என்கிறேன்…….

மறுமொழிகள்
    • தமிழ் ராஜா says:

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி. அனிதா

      இந்த கவிதைக்கு வயது 6, நீண்ட இடைவெளிக்கு பின் இந்த கவிதை உங்களால் கவனிக்கப் பட்டிருக்கிறது.மிகவும் மன இறுக்கத்தில் எதையுமே சிந்திக்க முடியாமல் இருந்த தருணத்தில் கவிதை எப்படி வரும் என்று
      யோசித்தேன். இந்த கவிதை பிறந்தது.
      தமிழ்ராஜா

  1. kitchabharathy says:

    kavithaigal padikkum neram sugamanathu ,kavithaigal eluthum neram suvaiyanadu.

  2. தமிழ் ராஜா says:

    கிச்சாபாரதி ,உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

  3. pa.era.ka says:

    thinamum irravil urangum mun un peyarai ucharitha pin than uranguven tholi.urangum podhe irandhu vittal kadiseyaga ucharitha thu un peyaraga irrukkattum enpathar kaka

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s