ஜூலை, 2008 க்கான தொகுப்பு

    உனக்கான வார்த்தைகளை நான்  தேடுவது இப்பொழுதெல்லாம்  குறைந்து விட்டது.  வார்த்தைகளின் தோல்விகள்  என் நெஞ்சில் எந்த சலனத்தையும்  உண்டு செய்யவில்லை  அதற்கு மாறாய் உன் மீதான  புரிதலைத் தான் ஆழமாக்கியது  உன் மௌன குறியீடுகளில்  உள்ள அன்பின் நீண்ட வாசகங்களை போல்  உன் வார்த்தைகளுக்கு என் மனதை  ஊடுருவும் சக்தி இல்லை இறப்பின் சுவையறியும் பொழுது தான் என் மனதில் உனக்கான நேசிப்பின் துளிர்வை உணர்ந்தேன் மனதின் வெறுமையான பக்கங்களை நீ மட்டுமே நிரப்புவதாக உணர்ந்தேன் உன் சுவாசப் பையினை நிரப்ப வேண்டிய உயிர் காற்றினை சுமந்தபடி நிற்கும் மரம் நான் உன் நிழலுக்காக காத்திருக்கிறேன் இலைகளற்ற கிளைகளில் உன்  அன்பினை நிரப்ப வருவாய் என………………

என் வாழ்க்கை எப்படி போகும் உன் சொல்லால் பாதைகள் மாறும் கனவாய் நீ இல்லை உயிராய் உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய் பொய்யை மறைக்கின்றேன் நான் இருப்பதாக இந்த உடலில் உண்மையில் நீயே எனை ஆட்கொண்டாய் உன் பார்வையில் யாரையோ கூப்பிட்டு விட்டு என்னை அழைத்தேன் என்கிறார்கள் எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள் நல்ல வேளை செவிகள் மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்னுயிரே வேலை செய்ய வில்லை என்பது உனக்கும் எனக்கும் [...]

பார்க்கக் கூட வெட்கப் பட்டால் உனக்கு என் முகம் மறந்துவிடாது என்றதும் , ஒரு பார்வைப் பார்த்தாயே நீ! என் ஆயூளில் மறக்க முடியாது அந்தப் பார்வையை… என்னப் பேசுவது என்றுத் தெரியாமல் விழித்த என்னைப் பார்த்து பயந்துட்டி யா? என்றாயே குல தெய்வத்தைப் பார்த்து யாரேனும் பயப்படுவார்களா? ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் லேசாகப் புன்னகைத்தாய் நீ! என்னை தெய்வம் என்றா சொல்கிறாய் அப்படியென்றால் எனக்கு கோவில் எங்கே? என இரு கைகளையும் சேர்த்துக் காட்டினாய்… என் [...]

அவள் நாசிகளை தொட்ட காற்றை சுவாசிக்கவே நான் வாழ்கிறேன் அவள் மனதினை அசைக்கவே என் ஒவ்வொரு அசைவுகளும் நிகழ்கிறது அவள் நீரோட்டமான மனதில் என் நிகழ்வுகள் பாசிப் போல் பசுமையாக இருக்கவே பாடுபபடுகிறேன் அவள் இதய துடிப்பில் என் காதல் அணுஅணுவாய் நுழைத்திடவே காத்திருக்கிறேன் அவள் நிழலிணை என் உயிர் தொடர்ந்திடவே ஒவ்வொரு நொடியும் முயல்கிறேன் அவள் மொழிகளை என் மனதில் பதித்திடவே ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கிறேன் அவள் முகத்தினில் என் முகம் பிரதிபலிக்கவே சுடரில் புறப்பட்டஒளியாய் [...]

நட்புக்கு நாகரிகம் இருக்குமானால் அது உன்னிடம் தோற்றுவிடும் பேச முயன்றும் உதடுகள் திறவாத நொடிகளில் நெஞ்சினுள்ளே  லேசான வலியை உணரும் பொழுதெல்லாம் காற்றை வெறுத்ததுண்டு என் நெஞ்சினுள்ள வார்த்தையை ஏன் ஒலி அலைகளாக மாற்றவில்லையென்று… காற்று கூட வெளி வார்த்தைக்குத் தான் மதிப்பளிக்கிறது மௌனத்தை இசைக்கும் அசைவு காற்றில் இல்லையா? உன் காதில் இல்லையா? நட்பின் மௌனங்கள் உணரப்படாதபொழுது வார்த்தைகளுக்கு மட்டும் வலிமையுண்டோ! வீண்…

நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை கடிகார முற்கள் கணித்ததில்லை நாடிகளில் செல்லும் ரத்த ஒட்டங்களே அதற்கு சாட்சி வருத்தத்தின் விபரீதங்கள் அறியாததினால் உன்னிடம் பேசாத நாட்கள் ஒட்டு மொத்த வருத்த்தின் கடிதங்களும் என் இதயமுகவரிக்கு வந்தது போல் ஓர் உணர்வு சொற்களும் குத்து மென்று இது வரை அறிந்ததில்லை “மன்னிப்பு” என்று நீ முதலில் சொல்லும் வரை… நான் செய்த தவறுக்கு

ஒன்றிரண்டு வாசகங்கள் உன்னைப் பற்றி நானெழுத வெள்ளைத் தாளில் ஓடு மடி கவிதை என்ற பேரருவி சிந்தி விழும் துளி சிரிப்பும் உன்னுடனே உறவு சொல்லும் பொத்தி வைத்த ஆசையெல்லாம் நீ நடக்கக் கூட வரும் கற்பனைக்கு கரு அமைய உன்னை பற்றியே நினைத்திருக்கும் கண் விழிக்கும் நேரமெல்லாம் உன் முகமே சுற்றி நிற்கும் எதை பற்றி நானெழுத உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை உண்மையடி நீ எனக்கு காதலியே!

கவிதை எழுத வருமா ! என் மனது முழு அமைதி இன்று பெருமா! சோர்வில் மிதந்து கிடக்கும் என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா! காற்று சுகமிருந்தால் உள்ளே சுவாசத் தடங்களிருக்கு சுவாசம் ஒழுங்கடைந்தால் வெளியே காற்று அடங்கி இருக்கு மலர்ந்த கனவுக்கெல்லாம் என் மனம் வாடகை கேட்டிருக்கு இன்று மனமே வாடகையாய் கனவில் புழூங்கியிருக்கு………. தூக்கம் எனக்கிருந்தால் இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை ஏட்டில் கிறுக்குவதால் என்மனம் தூக்கம் கொண்டதில்லை துக்கம் எனக்கிருந்தால் அதை ஏட்டில் இறக்கியிருப்பேன் மன [...]