உனக்குள்ளேயே உன்னைத் தேடிப் பார்
உன்னை முன்னிறுத்தி உன்னை
காண முயற்சி செய்
அங்கே நீ இருக்க மாட்டாய்
நானிருப்பேன்
தலைவலிக்கு தடவும் மருந்தினை
முயற்சி செய்யாதே
உனக்கு தலை வலியல்ல
பசிக்கிறது என்று சொல்லிக் கொண்டு
ரூசிக்க நினைக்காதே
இது பசியும் அல்ல
நினைத்துப் பார்க்கவே முடியாத
அளவு பறந்து விரிந்த
விண்வெளியைப் போல்
உன்னுள் ஒரு உணர்வு
உன்னைப் பனித் துளியைப் பற்றி
திடீரென பறக்கச் செய்கிறதா
நொடிகளை துடிக்கச் செய்யாமல்
காலம் மட்டும் உன்னை நம்பி
உன் காலடியில் நாயைப் போல்
சுற்றி வருகிறதா
இருந்தும் உன்னால் ஒரு நொடியைக்
கூட நகர்த்த முடியாது
ஆனால் நாட்களோ கண் சீமுட்டுவதற்குள்
காணாமல் போகும்
வருடங்கள் தொலையுமுன் நீ
தொலைந்ததை உணர்ந்து விடு
இல்லையெனில் காலத்தோடு
உன் கனவுகளும் கடந்துவிடும்
உணர்ந்து விடு
Posted: ஜூன் 18, 2008 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:உணர்ந்து விடு, உணர்வு, கண், கனவு, துளி, நொடி, பசி, பனித்துளி, முயற்சி, வருடங்கள், வலி
மறுமொழிகள்









தொலைந்த என்னை தேடும் முன்
முடிந்து போனதென்ன வாழ்க்கை
முடிந்ததென்று நினைக்கயிலே
தொடர்ந்து வந்ததென்ன காதல்
காதல் என்று அணைக்கயிலே
மாறிபோன காட்சி
காமம் மட்டும் போதும் என்று
மாண்டுவரும் மானுடம்
தேடல் என்னுள் நடந்தபின்னும்
தேடி திரிகிறேன் நான்
தொலைந்து போன என்னை
நாடி நடக்கிறேன்.
தொலைந்ததை உணர்ந்து விடு
இல்லையெனில் காலத்தோடு
உன் கனவுகளும் கடந்துவிடும்.
நிஜம்தான் காலத்தோடு கனவுகள் மட்டுமல்ல காதலும் கடந்துவிடுகிறது.