ஜூன், 2008 க்கான தொகுப்பு

உனக்குள்ளேயே உன்னைத் தேடிப் பார் உன்னை முன்னிறுத்தி உன்னை காண முயற்சி செய்                         அங்கே நீ இருக்க மாட்டாய் நானிருப்பேன் தலைவலிக்கு தடவும் மருந்தினை முயற்சி செய்யாதே உனக்கு தலை வலியல்ல பசிக்கிறது என்று சொல்லிக் கொண்டு     ரூசிக்க நினைக்காதே இது பசியும் அல்ல நினைத்துப் பார்க்கவே முடியாத அளவு பறந்து விரிந்த  விண்வெளியைப் போல் உன்னுள் ஒரு உணர்வு உன்னைப் பனித் துளியைப் பற்றி திடீரென பறக்கச் செய்கிறதா நொடிகளை துடிக்கச் செய்யாமல் காலம் மட்டும் உன்னை நம்பி உன் காலடியில் நாயைப் போல் சுற்றி வருகிறதா இருந்தும் உன்னால் ஒரு நொடியைக் கூட நகர்த்த முடியாது ஆனால் நாட்களோ கண் சீமுட்டுவதற்குள் காணாமல் போகும் வருடங்கள் தொலையுமுன் நீ தொலைந்ததை உணர்ந்து விடு இல்லையெனில் காலத்தோடு உன் கனவுகளும் கடந்துவிடும்

ஏன் இப்படி நாயைப் போல் அலைகிறாய் ? உனக்கென்ன குறை வைத்தேன் நான் ? இப்படி சோம்பி கிடக்க வா நீ பிறந்தாய்,உனக்குள் இருந்த அறிவு  எங்கே? உன்னை மனிதனாக்கிய  அந்த சிந்தனை எங்கே  எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி இப்படி இருப்பது உனக்கு உறுத்தவில்லையா? உன்னை எந்த ஒரு கலங்கமுமின்றி  வளர்க்க எத்தனை முயற்சி செய்திருப்பேன். இருந்தும் நீ  இப்படி இருக்கலாமா? அவளிடம் அப்படி எண்னவிருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை. உனக்காக அவள் இது வரை ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. நீயோ இரும்புப் பிடியாய் அவளை விடாமல் நினைத்தபடி  இருக்கிறாய்  மடையா! காதாலென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ முட்டாள் . எத்தனை புத்தகங்களை உனக்காக உன் அறிவின் வளர்ச்சிக்காக  புரட்டியிருப்பேன். அத்தனையையும் வீணாக்கி விட்டாயே! உன் அறியாமையை விளக்க எத்தனை பேரை நாடிச் சென்றிருப்பேன், அவர்களிடம் எத்தனை கேள்விகள் கேட்டிருப்பேன்  உனக்காக! உன்னை பக்குவமடைய செய்வதற்காக… எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்று எவளோ ஒருத்தி பின்னே  செல்கிறாயே  இது  உனக்கே  நியாயமாக இருக்கிறதா சொல் …  சொல்…..? “ டேய்  வசந்த் அங்க என்னடா சத்தம்?” ”ஒண்ணுமில்லைம்மா! ரேடியோ கேட்கலாம்னு போட்டேன் சரியா வேலை செய்யலை“ அம்மா பக்கத்து அறையில் இருந்து ”தூங்கலையா? மணி பன்னெண்டு ஆகுது” என்று குரல் கொடுத்துவிட்டு மீண்டும் அமைதி ஆனாள் ” சே! பொய் உன்னால தான் ” என்றவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான் லேசான இருட்டில் சின்ன, கைக்கு அடக்கமான ஒரு கண்ணாடியில் தன்  முகத்தைப் பார்த்தபடி தன்னையே திட்டிக் கொண்டிருந்த்தான் வசந்த். அதெப்படி, அவ பின்னாடி போன ,அவ என்ன அவ்வளவு அழகா? அந்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் நீ அவளைத் தவிர வேறு  பெண்களையே பார்க்கவில்லையா? ஏன் அவர்கள் மேல் செல்லாத உன் பார்வை அவள் மேல் மட்டும்  சென்றது, [...]

  உறவு உணர்வு என்று உளறிக் கொண்டிருந்தாலும் உறவாகாமல் உணராமல் என்னுள் ஓர் உளறல் என் நகம் நனைக்கும் வயதிலிருந்து சிலேட்டு பல்பம் வைத்தெழுதியா நட்பைக் கற்றேன். என்னைப் பார்த்து நட்பென்றால் உனக்குத் தெரியுமா? என்று ஒவ்வொருவர் கேட்கும் பொழுதும் யோசித்ததுண்டு என்ன தான் சண்டைப் போட்டுக்கொண்டாலும் என் பள்ளி நண்பன் எனக்கு இன்றும் சுகமளித்துக் கொண்டே இருக்கிறான் என் மனதில் மௌன நினைவகளோடு நான் எப்பொழுதும் சிலுமிசம் செய்யும் பக்கத்து வீட்டுச் சிறுமி ‘அ.. ஆ [...]