தமிழ் ராஜா எழுதியவை | மே 29, 2008

உன்னை கேட்கிறதடி

ஆசை நீள்கிறதடி
உன்னை நினைக்கையில் காதல்
கருவறையைத் தேடி அலையுதடி
மனம் உன்னை நாடத் துடிக்குதடி
கோழை நெஞ்சுக்குள் ஏற்றம்
பெறுவதைப் போல்
மேனி முழுவதிலும் நொடியில்
சூடு குறையுதடி
காற்றை அடக்குவதில் இதயம்
தோற்றுப் போவதைப் போல்
சுவாசம் எனக்குள்ளே சண்டை
செய்யுதடி
போற்றி வளர்த்த உயிரும்
உனைக் காட்டியே எனை
விட்டுப் பிரிய விழைகிறதடி
எவ்வளவு தேற்றியும் என்னுள்ளம்
குழந்தைப் போல் அழுதபடி
உன்னை கேட்கிறதடி
நீ வேண்டும் என்கிறதடி

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்