மே 29, 2008 க்கான தொகுப்பு

ஆசை நீள்கிறதடி உன்னை நினைக்கையில் காதல் கருவறையைத் தேடி அலையுதடி மனம் உன்னை நாடத் துடிக்குதடி கோழை நெஞ்சுக்குள் ஏற்றம் பெறுவதைப் போல் மேனி முழுவதிலும் நொடியில் சூடு குறையுதடி காற்றை அடக்குவதில் இதயம் தோற்றுப் போவதைப் போல் சுவாசம் எனக்குள்ளே சண்டை செய்யுதடி போற்றி வளர்த்த உயிரும் உனைக் காட்டியே எனை விட்டுப் பிரிய விழைகிறதடி எவ்வளவு தேற்றியும் என்னுள்ளம் குழந்தைப் போல் அழுதபடி உன்னை கேட்கிறதடி நீ வேண்டும் என்கிறதடி