மே 19, 2008 க்கான தொகுப்பு

எனக்கான நாட்களை நமக்காக வாழ நினைத்தேன் நீயோ நமக்கான பாதையில் உனக்காக பயணிக்கிறாய் எதற்காக? என்று கேட்டு உனக்கான பயணத்தை நிறுத்த விருப்பமில்லை அதற்காகவே நானும் என் பயணத்தை பிறர்காக மாற்றிக் கொண்டேன் எதுக்காக இந்த பயண மென எனக்காக கேட்பதைப் போல் உனக்காக நீ கேட்டாய் வாழ்க்கைக்கான என் பயணத்தை பிழைப்புக்காகவென்று மாற்றிக் கொண்ட உன்னிடம் என் பயணம் காதலுக்காகவென்று மட்டும் ஏனோ! என்னால் சொல்ல முடியவில்லை!

சுற்றியிருக்கும் சூழலில் சுகமில்லை மற்றவர்க்கும் என் மன ஏக்கம் புரியவில்லை பற்றியிருக்கும் காதல் நோயை சொல்லிடவே வற்றியிருக்கும் என் நாவால் முடியவில்லை ஒட்டியிருக்கும் ஒரு துளி உயிரும் மிஞ்சிடவே சக்தி கொடுக்கும் அவன் மனம் நாடி அலையுதடி

உன்னை முத்தமிட எனக்கு விருப்பமில்லை என் காதலை சத்தமிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை தொடுதலுக்காக மட்டும் காதலில்லை என்பதில் என் மனம் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை மறதியை வெல்லும் ஆற்றல் உன் நினைவுக்கு மட்டும் தானடி உள்ளது சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப் போன அத்தனை வார்த்தைகளும் உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறது உன் கண்கள் மட்டும் ஏனோ அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது எது வரை …என்பதில் தான் எனக்கும் உனக்கும் நடக்கிறது ஒரு காதல் [...]