ஆசை நீள்கிறதடி உன்னை நினைக்கையில் காதல் கருவறையைத் தேடி அலையுதடி மனம் உன்னை நாடத் துடிக்குதடி கோழை நெஞ்சுக்குள் ஏற்றம் பெறுவதைப் போல் மேனி முழுவதிலும் நொடியில் சூடு குறையுதடி காற்றை அடக்குவதில் இதயம் தோற்றுப் போவதைப் போல் சுவாசம் எனக்குள்ளே சண்டை செய்யுதடி போற்றி வளர்த்த உயிரும் உனைக் காட்டியே எனை விட்டுப் பிரிய விழைகிறதடி எவ்வளவு தேற்றியும் என்னுள்ளம் குழந்தைப் போல் அழுதபடி உன்னை கேட்கிறதடி நீ வேண்டும் என்கிறதடி
மே, 2008 க்கான தொகுப்பு
உன்னை கேட்கிறதடி
Posted: மே 29, 2008 in காதல்குறிச்சொற்கள்:என்னுள்ளம், கருவறை, காதல், குழந்தை, சண்டை, சூடு, நீ வேண்டும், மேனி
கைப்பட்டு விடக்கூடாதென்று
Posted: மே 27, 2008 in காதல்குறிச்சொற்கள்:ஆசை, ஆரத்தழுவி, தழுவி, துடிக்குதடி, மனம், மோதும், விரகத்தில்
உன்னை ஆரத் தழுவி அணைத்து முத்தமிட என் ஆசை துடிக்கு தடி கைப்பட்டு விடக்கூடாதென்று என் மனம் நினைக்குதடி ………………………………………………………………………………. மோதும் விரகத்தில் என் மனம் மூர்ச்சை அடையுதடி உன்னை கண்டதும் ஏனோ பேச்சை மறக்குதடி ……………………………………………………………………………….. பல் சுவைக் கவியெல்லாம் உன் பக்கத்தில் இருப்பது போல் வருமா? பால் நிலவு கூட உன் வெட்கத்திற்கு நிகராகுமா? …………………………………………………………………………………… உன் இதழ் சிப்பியில் பேச்சு முத்தை உதிர்த்து விட்டாய் ஏனோ அதில் என் மூச்சை நிறுத்தி விட்டாய் [...]
நெஞ்சம் மறக்கலையே…
Posted: மே 27, 2008 in நட்புகுறிச்சொற்கள்:அனுபவம், காலங்கள், காலோடு, சகோதிரி, செல்கையிலே, நினைவு, பழைமை, வலி, வழி
காலங்கள் செல்லும் வழி என் காலோடு நான் செல்கையிலே வீதி மட்டும் வந்த உன் நட்பு என் விழியை நனைத்துப் போகையிலே கால் வலியும் தெரியலையே கன்னி உந்தன் நினைவினிலே முகம் சிவக்க சிரித்தநாட்கள் என் ஆயுள் முழுதும் என் நெஞ்சினிலே பழுகும் பொழுதும் படித்த உன் மனது பிரியும் பொழுதும் நெஞ்சம் மறக்கலையே பாசமென்றோ! நேசமென்றோ! பல பெயர் சொல்லலாம் ஆனால் நட்பொன்றே நம் உறவை அழகாகச் சொல்லும் வார்த்தை! இல்லை, வாசகம்! உன் பந்தம் [...]
என்னால் சொல்ல முடியவில்லை!
Posted: மே 19, 2008 in ரோஜாகுறிச்சொற்கள்:என் பயணம், காதலுக்காக, பயணிக்கிறாய், பிறர்காக, பிழைப்பு
எனக்கான நாட்களை நமக்காக வாழ நினைத்தேன் நீயோ நமக்கான பாதையில் உனக்காக பயணிக்கிறாய் எதற்காக? என்று கேட்டு உனக்கான பயணத்தை நிறுத்த விருப்பமில்லை அதற்காகவே நானும் என் பயணத்தை பிறர்காக மாற்றிக் கொண்டேன் எதுக்காக இந்த பயண மென எனக்காக கேட்பதைப் போல் உனக்காக நீ கேட்டாய் வாழ்க்கைக்கான என் பயணத்தை பிழைப்புக்காகவென்று மாற்றிக் கொண்ட உன்னிடம் என் பயணம் காதலுக்காகவென்று மட்டும் ஏனோ! என்னால் சொல்ல முடியவில்லை!
ஒரு துளி உயிரும்
Posted: மே 19, 2008 in காதல்குறிச்சொற்கள்:அலையுதடி, ஏக்கம், ஒரு துளி, சுகமில்லை, புரியவில்லை
சுற்றியிருக்கும் சூழலில் சுகமில்லை மற்றவர்க்கும் என் மன ஏக்கம் புரியவில்லை பற்றியிருக்கும் காதல் நோயை சொல்லிடவே வற்றியிருக்கும் என் நாவால் முடியவில்லை ஒட்டியிருக்கும் ஒரு துளி உயிரும் மிஞ்சிடவே சக்தி கொடுக்கும் அவன் மனம் நாடி அலையுதடி
உன்னை முத்தமிட எனக்கு விருப்பமில்லை என் காதலை சத்தமிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை தொடுதலுக்காக மட்டும் காதலில்லை என்பதில் என் மனம் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை மறதியை வெல்லும் ஆற்றல் உன் நினைவுக்கு மட்டும் தானடி உள்ளது சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப் போன அத்தனை வார்த்தைகளும் உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறது உன் கண்கள் மட்டும் ஏனோ அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது எது வரை …என்பதில் தான் எனக்கும் உனக்கும் நடக்கிறது ஒரு காதல் [...]
அம்மா !உன் நினைவுகள்
Posted: மே 8, 2008 in அம்மாகுறிச்சொற்கள்:அம்மா, உப்பு, கவிதை, காதல், நினைவுகள், மல்லிப் பூ, முத்தம்
உன் நினைவுகள் படாத ஒரு பொருளை வீட்டில் என்னால் காட்ட முடியாது அம்மா! நீ கட்டிய சேலை என் தலையணையாக மாறியது. நீ என் கையைப் பிடித்து கற்றுத் தந்த மொழிகள் இன்று கவிதைப் படைக்கிறது நீ முதன்முதலில் வாங்கிய உப்புக்கான டப்பாவைப் பார்க்கையில் உன் கைகளின் சுவை இன்றும் நாவில் நிற்கிறது நீ சொல்லித் தந்தபடி நான் விதைத்த கத்திரி இன்று நம் வீட்டுக் குழம்பில் கமகமக்கிறது. இப்படி வீட்டில் நீ கட்டிய பந்தலில் [...]
ரத்தத்தில் நனைந்து வந்த என்னை முத்தத்தால் நனைத்த உன் இதழ்களில் முதல் முறை என் பெயரை எப்பொழுது உச்சரித்தாயோ அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குரலில் கலந்து வரும் உரிமையை உணர்வை வேறு எந்த குரலிலும் நான் உணர்ந்ததில்லை உன் விரல் பட்ட உணவில் தான் நான் உயிர் வளர்த்தேன் உன் இதழ் சிந்திய வார்த்தையை உச்சரித்துத் தான் மொழி பழகினேன் உன் சுவாசத்தில் கலந்த காற்றை சுவாசித்துத் தான் வாழ்ந்திருக்கேன் முதல் நடந்திடும் நான் விழுந்தது [...]








