தமிழ் ராஜா எழுதியவை | செப்டம்பர் 27, 2007

எண்ணிலா ஆசைகள்

காற்றில்
வந்து காதில் வீழ்ந்த முதல்
சொல்லைப் பல் முளைக்கும்  முன் சொல்ல
ஆசைப்பட்டு எண்ணிலா எண்ணம் வளர்த்தேன்
அந்த எண்ணத்தில் தான் அம்மா என்றுரைத்தேன்
பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம்
நண்பனாக்கி தூக்கத்திலும் துள்ளி குதித்தேன்
துவண்டு விழுந்தாலும் தூக்கிவிடும் 
அன்பை ரசித்தேன்………………
புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது
பல பக்கம் ரசித்தேன்…………. 
அந்த பக்கத்தில் பார்த்த
புது படத்தை ரசித்தேன்………
அழுது கொண்டு பள்ளிச்
செல்லும் நேரம் சனி ஞாயிற்றை
ரசித்தேன்………………
இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று
பள்ளி நாட்களுக்கு துடித்தேன்
விண்மீன்களை  எல்லாம் கைக்குள்
அடக்க வேண்டுமென கல்லூரிக்குள்
காலடி வைக்கும் பொழுது நினைத்தேன்
காலடி பதிக்கும் முன்னரே காதலின்
அடியை  அறிய ஆசைப்பட்டேன்
காதலியை காதலிக்க ஆசை
அவளும் நம்மை மட்டுமே 
காதலிக்க ஆசை
கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை
தேர்வில் காதல் அலீகளின் வெற்றியை
பார்த்ததும் காதலை விட்டு ஓட ஆசை
அன்பை விட்டு அழகுக்கு ஆசை
அழகும் அழிந்துவிடுமோ!
என்றெண்ணி புகழுக்கு ஆசை
புகழுக்காக தொடர்ந்த படிப்பை
தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை
பார்வையில் பணம் பார்க்க ஆசை
பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை
காமத்திற்கு ஆசை – அதனோடு
கவுர த்திற்கு ஆசை
திருமணத்தோடு திருடிவிட்ட                                                                                                                         ஆசைகளை எல்லாம்
திருப்பிக் கொடுக்க ஆசை
நம் போல் ஒரு பிள்ளை 
நமக்குப் பிறக்க ஆசை
நமக்காக   துடிக்கும் ஓர் உள்ளத்தை 
நண்பனாக்க ஆசை
நகம் நனைக்கும் வயதில் நட்பை 
உதைத்த  தோசம் 
நரை வந்த பின்னும் நண்பனைத் தேடும்
ஒரு நேசம்
நேசத்தோடு  பிள்ளைகளுடனே வசிக்க ஆசை
நிறைவேறாவிட்டால் தீரா நித்திரையில்
வீழ்ந்து  விட ஆசை…………………………

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்