உயிரின் ஆசை

Posted: செப்டம்பர் 27, 2007 in ரோஜா
குறிச்சொற்கள்:, , , ,

தாய் மடியில் அனுபவித்த முதல் வலியை
அனுபவிக்க ஆசை
அந்த நினைவற்ற வலிகளுடனே இருந்திருக்கக்கூடாதா
என்றாசை 
என் மேனி சிந்திய முதல் ரத்தத்தை
பார்க்கா சை  — அதுவே
நான் சிந்திய கடைசி ரத்தமாகி
இருக்கக்கூடாதா என்றாசை
பள்ளி சென்ற முதல் நாளை 
எப்படியாவது வாங்க ஆசை
பக்குவப்படாமல் பள்ளிக் 
குள்ளேயே இருந்துவிட ஆசை
பழகும் பொழுது நல்ல 
நட்பிற்குஆசை
அந்த நட்பினிலும் சிறந்த 
மனிதரைகாண ஆசை
பிரிந்திடினும் எனை மறவா 
நண்பனுக்கு ஆசை
அந்த நண்பணிடமும் எனக்குரிய 
உரிமைக்கு ஆசை
மறந்திடினும் ஒரு முறையாவது 
காதலிக்க ஆசை
அந்த காதலிலும் எனக்குரியவ ளி டம் 
ஊடலுக்குஆசை
ஒரு முறையாவது எனக்குரியவளை 
தொட்டு விடஆசை
அந்தத் தொடு உணர்வும் திருமணத்திற்கு 
பின்னிருக்கஆசை             பத்து மாதம் எனக்குரியவளின்                                                                                                                   பாரம் சுமக்க ஆசை                                                                                                                                                                                   ன்று எடுக்கும் பொழுது என்னவளுடன்
வலி தாங்க ஆசை
என்னால் தோன்றிய உயிரை 
உன்னதமாக் ஆசை
அந்த முயற்சியிலும் என்னவள் 
உணர்வு கலக்க ஆசை
இருக்கும் வரைக்கும் 
இன்பத்திற்கே ஆசை
இறக்கும் பொழுதும் துன்பம்
வராமலிருக்க ஆசை
கல்லறை யிலும் உறக்கமில்லா 
ஆசை
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை………………………………….

மறுமொழிகள்
  1. R.Kalai Selvan says:

    Hai,
    Really fantastic. we enjoyed!
    Keep it
    All the best

  2. Kalai says:

    Hai,
    If u have any tamil poems pls send to me

    Best wishes
    Kalai

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s