தமிழ் ராஜா எழுதியவை | ஆகஸ்ட் 29, 2007

என் உள்ளங்கையில்

a6.jpg

என்  உள்ளங்கையில்  முகம்  புதைத்து
     நீ  அழுத  நினைவிருக்கு.
உன்    கண்ணிரண்டில்   நீர்  பெருக
      என்  விரலால்  துடைத்த  நினைவிருக்கு
 
நேசம்  வைத்த  உன்  விழியில்
      பாச நீரைப்  பார்க்க  மனம்  பொறுக்கலையே!
பூவாசம்  கண்ட  உறவில்
      பிரிவு  தோக்ஷம்  காண  மனம்  நினைக்கலையே!
   
என்  தேகம்  தொட்ட  உன்  மனதில்
     நுனி  நினைவை க்  கூட  நான்  வைக்கலையே!
என்  மனதை  தொட்ட  உன்  நினைவில்
     துளி  நொடிகள்  கூட  நான்  எடுக்கலையே!
 
ஏட்டில்  விதைத்த  என்  கவியில்…..
     பூட்டியே  உன்  நினைவு  இருக்குதடி 
அதை  காட்டியே  இதயம்  உன்  பிரிவில்
     எனை  வாட்டியே  மெல்ல ரசிக்குத் தடி
போட்டியே  இடம்  பிடிக்க  உன்  மனதில்
     இடம்  பிடித்தும்  தோல்வி யே  என்ன  மாயமடி……………..!!!


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்