முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு வருகிறாய் என்றதும் — என் வீட்டிற்குள் தான் எத்தனை மாற்றங்கள்–உன்னால் நிகழ்ந்தது தெரியுமா? ஆனால் வீட்டினுள் நீ நுழைந்ததும் உன் பார்வையில் அது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பதில் ஏமாற்றம் தான் எனக்குள் அந்த மாற்றத்தையும் நீ கவனித்துவிட்டாய் நொடியில்………….. என்னவென்ற உன் பார்வைக்கு என்ன சொல்வது நான்…… நீ உள்ளே வந்ததும் தான் வீடு பிரகாசமடைந்து குறைகள் கண்ணுக்குத் தெரிகிறத்தென்றேன் மின்னலாய் ஒரு ஒளி உன் சிரிப்பில் வீடு மேலும் [...]








