சித்திரப் பெண்ணழகே ! உன்னை
என் சிந்தையில் வைத்திடவே
கண்மலர் பூத்தி டம்மா பாவையே
பார்வை ஒருங்கிடவே
என்னையே மனதில் வைத்தாய்
என்னுடன் நினைவையும் சேர்த்து வைத்தாய்
கண்ணிலே காதலையே கன்னியே
என்னுள் ஏன் வைத்தாய்
காலத்தின் வர்ணணையில் கன்னியே
காதலின் சொல்லினிக்கும்
வாழும் தீரத்தில் உள்ளதடி
நம் காதலின் கண்ணியமே
சேர்ந்து பிரிந்திடினும்
பிரிந்து சேர்ந்திடினும்
இருக்கும் பொழுதினிலே
ஆன்மா இன்பம் களிக்குமடி
சேர்ந்தப் பொழுதினிலே
உன் அன்பு சாரம் புரியலையே
உனை பிரிந்த காலத்தினிலே
உனை தவிர யாரும் தெரியலையே
சோகத்தின் ஆழத்திலே
உயர் காதல் புரியு மடி
அது காமத்தின் இன்பத் திலே
ஊறி மகிழு மடி
மனதில் பாட்டு உதிக்கு தடி
நீ என் பக்கமிருக்கையிலே
அதனுள் இசையும் இணையு தடி
நீ என்னை விட்டுப் பிரிகையிலே
உள்ளத்தில் குற்றமேதுவுமில்லை
உன்னுடன் கூடி மகிழ்வதிலே
ஊடலில் உனக்கு நிகருமில்லை
குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே
சித்திரப் பெண்ணழகே !
Posted: ஜூன் 25, 2007 in காதல்குறிச்சொற்கள்:அன்பு, ஆன்மா, கண்ணியமே, கண்மலர், கன்னியே, குற்றமுண்டா, சாரம், சித்திரப்பெண்ணழகே, சொல்லினிக்கும், தமிழ், பாட்டு, பாவை, வர்ணணை
0









