தமிழ் ராஜா எழுதியவை | ஆகஸ்ட் 26, 2008

உன் சத்தமிடாத மௌனம்

என் உறக்கத்தை இயக்கும் இரவு
என் உயிரை இயக்கும் இதயம்
இரண்டிற்கும் இடையில் நீ
வந்து ஏன் இயங்க மறுக்கிறாய்
என்னுள் அமைதியை இயக்கும்
முயற்சியை நான் செய்கிறேன்
அந்த முயற்சியை உன் சத்தமிடாத
மௌனம் களைத்துவிடுகிறது
உன் சத்தங்களில் தான் என்
மௌனம் இயங்குகிறது.
மெல்ல மெல்ல உன் சிரிப்பின்
சத்தம் என்னை அமைதி
படுத்துகிறது.
உன் இயக்கத்தில் தான் என்
அமைதி
அமைதியில் என் உறக்கம்
என் உறக்கத்தில் தான் உன்
உயிரின் இயக்கம் உணர்கிறேன்
என் இதயத்தில்…
தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 9, 2008

உன் அன்பினை நிரப்ப வருவாய் என………………

 

 

உனக்கான வார்த்தைகளை நான் 
தேடுவது இப்பொழுதெல்லாம் 
குறைந்து விட்டது. 
வார்த்தைகளின் தோல்விகள் 
என் நெஞ்சில் எந்த சலனத்தையும் 
உண்டு செய்யவில்லை 
அதற்கு மாறாய் உன் மீதான 
புரிதலைத் தான் ஆழமாக்கியது 
உன் மௌன குறியீடுகளில் 
உள்ள அன்பின் நீண்ட வாசகங்களை போல் 
உன் வார்த்தைகளுக்கு என் மனதை 
ஊடுருவும் சக்தி இல்லை
இறப்பின் சுவையறியும் பொழுது
தான் என் மனதில் உனக்கான
நேசிப்பின் துளிர்வை உணர்ந்தேன்
மனதின் வெறுமையான பக்கங்களை
நீ மட்டுமே நிரப்புவதாக உணர்ந்தேன்
உன் சுவாசப் பையினை நிரப்ப
வேண்டிய உயிர் காற்றினை
சுமந்தபடி நிற்கும் மரம் நான்
உன் நிழலுக்காக காத்திருக்கிறேன்
இலைகளற்ற கிளைகளில் உன் 
அன்பினை நிரப்ப வருவாய் என………………

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

யாரிடமும் சொல்லிவிடாதே!

என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்……………..
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

உன் சிணுங்களை

பார்க்கக் கூட வெட்கப் பட்டால்
உனக்கு என் முகம் மறந்துவிடாது
என்றதும் , ஒரு பார்வைப் பார்த்தாயே நீ!
என் ஆயூளில் மறக்க முடியாது
அந்தப் பார்வையை…
என்னப் பேசுவது என்றுத் தெரியாமல்
விழித்த என்னைப் பார்த்து
பயந்துட்டி யா? என்றாயே
குல தெய்வத்தைப் பார்த்து
யாரேனும் பயப்படுவார்களா?
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்
லேசாகப் புன்னகைத்தாய் நீ!
என்னை தெய்வம் என்றா சொல்கிறாய்
அப்படியென்றால் எனக்கு கோவில் எங்கே?
என இரு கைகளையும் சேர்த்துக் காட்டினாய்…
என் இடப் பக்க மார்பில் கை
வைத்து நான்காட்டினேன் இங்கேயென்று!
உன் முகம் சற்றே ஒரு சிணுங்களை
வெளிப்படித்தியது.
என் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு நொடியில்
பதிவு செய்யப் பட்டது
அந்தக் காட்சி
இன்னும் ஒரு முறையென்று மனம்
ஏங்க , மீண்டும் முயற்சியில் இறங்கியது
உதடுகள் அந்த சிணுங்களை காண…

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

என் நிகழ்வுகள்

அவள் நாசிகளை தொட்ட காற்றை
சுவாசிக்கவே நான் வாழ்கிறேன்
அவள் மனதினை அசைக்கவே
என் ஒவ்வொரு அசைவுகளும் நிகழ்கிறது
அவள் நீரோட்டமான மனதில் என்
நிகழ்வுகள் பாசிப் போல் பசுமையாக
இருக்கவே பாடுபபடுகிறேன்
அவள் இதய துடிப்பில்
என் காதல் அணுஅணுவாய்
நுழைத்திடவே காத்திருக்கிறேன்
அவள் நிழலிணை
என் உயிர் தொடர்ந்திடவே
ஒவ்வொரு நொடியும் முயல்கிறேன்
அவள் மொழிகளை
என் மனதில் பதித்திடவே
ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கிறேன்
அவள் முகத்தினில்
என் முகம் பிரதிபலிக்கவே
சுடரில் புறப்பட்டஒளியாய் திரிகிறேன்
அவள் இதழ் சிந்தும் நீரை
சுவைத்திடவே தேன் மொய்க்கும்
வண்டுகள் தேடி அலைக்கிறேன்
அவள் காதினில் நுழையும் ஓசையில்
என் மொழி கலந்திடவே
மென்மையான காற்றாக்கிறேன்
அவள் மடி மீது கண் உறங்கிடவே
என் உயிர் மொத்தத்தையும் உறங்க வைக்கிறேன்

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

நட்பின் மௌனங்கள்

 

நட்புக்கு நாகரிகம் இருக்குமானால்
அது உன்னிடம் தோற்றுவிடும்                                                                                                                    பேச முயன்றும் உதடுகள்                                                                                                                      திறவாத நொடிகளில் நெஞ்சினுள்ளே                                                                                                   லேசான வலியை உணரும் பொழுதெல்லாம்                                                                                     காற்றை  வெறுத்ததுண்டு                                                                                                                                               என் நெஞ்சினுள்ள வார்த்தையை                                                                                                         ஏன் ஒலி அலைகளாக மாற்றவில்லையென்று…                                                                                                                    காற்று கூட வெளி வார்த்தைக்குத் தான்                                                                                                   மதிப்பளிக்கிறது                                                                                                                                             மௌனத்தை இசைக்கும் அசைவு                                                                                                            காற்றில் இல்லையா?                                                                                                                                 உன் காதில் இல்லையா?

நட்பின் மௌனங்கள் உணரப்படாதபொழுது
வார்த்தைகளுக்கு மட்டும்
வலிமையுண்டோ! வீண்…
தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

பூக்களின் பாதுகாப்பு


நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை
கடிகார முற்கள் கணித்ததில்லை
நாடிகளில் செல்லும் ரத்த
ஒட்டங்களே அதற்கு சாட்சி
வருத்தத்தின் விபரீதங்கள்
அறியாததினால் உன்னிடம்
பேசாத நாட்கள்
ஒட்டு மொத்த வருத்த்தின்
கடிதங்களும் என் இதயமுகவரிக்கு
வந்தது போல் ஓர் உணர்வு
சொற்களும் குத்து மென்று
இது வரை அறிந்ததில்லை
“மன்னிப்பு” என்று நீ முதலில்
சொல்லும் வரை…
நான் செய்த தவறுக்கு

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

உண்மையடி நீ எனக்கு

ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னை பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!
தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

கவிதை எழுத வருமா !

கவிதை எழுத வருமா !
என் மனது முழு அமைதி
இன்று பெருமா!
சோர்வில் மிதந்து கிடக்கும்
என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா!
காற்று சுகமிருந்தால் உள்ளே
சுவாசத் தடங்களிருக்கு
சுவாசம் ஒழுங்கடைந்தால்
வெளியே காற்று அடங்கி இருக்கு
மலர்ந்த கனவுக்கெல்லாம் என்
மனம் வாடகை கேட்டிருக்கு
இன்று மனமே வாடகையாய்
கனவில் புழூங்கியிருக்கு……….
தூக்கம் எனக்கிருந்தால்
இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை
ஏட்டில் கிறுக்குவதால் என்மனம்
தூக்கம் கொண்டதில்லை
துக்கம் எனக்கிருந்தால் அதை
ஏட்டில் இறக்கியிருப்பேன்
மன வாட்டம் போக்கியிருப்பேன்
விழி தூக்கம் கொண்டிருப்பேன்
துக்கமில்லை தூக்கமில்லை
எதுவுமின்றி நான் சோர்ந்து கிடக்கிறேன்
நெஞ்சம் வேர்த்துக் கிடக்கிறேன்
கண்ணீர் கோர்த்து கிடக்கிறேன்
கவிதையில் பூத்துக் கிடக்கிறேன்
சோற்று பருக்கைத்தனை வாயில்
போட்டுக் கொண்டப் பொழுது
உழவன் வாட்டம் என் மனதில்
தாக்கம் கொள்கிறதே
வாழ்வு முழுவதிலும்
மன புழுக்கம் எதுவுமின்றி
வாழ நினைக்கையில்
வருத்தம் வாசல் முன் வருதே
தேடி திரிகையில் அன்பே
முதலென முடிவும் தெரியுதே
காத்துக் கிடக்கிறேன் அன்பினை
சுவாசம் நுழைக்ககவே!
அதில் இன்பம் தெரியவே
ஏட்டில் கிறுக்கல் நிறையுதே
சொல்ல நினைத்ததை ஏட்டில்
கிறுக்கிப் பார்க்கிறேன்
சோர்வு எனக்கிருந்தால் அதனுடனே
கொட்டித் தீர்க்கிறேன்–
நிறைவில் வருவதையே கவிதை !
இன்பக்கவிதை!என்கிறேன்…….

தமிழ் ராஜா எழுதியவை | ஜூன் 18, 2008

உணர்ந்து விடு

உனக்குள்ளேயே உன்னைத் தேடிப் பார்
உன்னை முன்னிறுத்தி உன்னை
காண முயற்சி செய்                        
அங்கே நீ இருக்க மாட்டாய்
நானிருப்பேன்
தலைவலிக்கு தடவும் மருந்தினை
முயற்சி செய்யாதே
உனக்கு தலை வலியல்ல
பசிக்கிறது என்று சொல்லிக் கொண்டு    
ரூசிக்க நினைக்காதே
இது பசியும் அல்ல
நினைத்துப் பார்க்கவே முடியாத
அளவு பறந்து விரிந்த 
விண்வெளியைப் போல்
உன்னுள் ஒரு உணர்வு
உன்னைப் பனித் துளியைப் பற்றி
திடீரென பறக்கச் செய்கிறதா
நொடிகளை துடிக்கச் செய்யாமல்
காலம் மட்டும் உன்னை நம்பி
உன் காலடியில் நாயைப் போல்
சுற்றி வருகிறதா
இருந்தும் உன்னால் ஒரு நொடியைக்
கூட நகர்த்த முடியாது
ஆனால் நாட்களோ கண் சீமுட்டுவதற்குள்
காணாமல் போகும்
வருடங்கள் தொலையுமுன் நீ
தொலைந்ததை உணர்ந்து விடு
இல்லையெனில் காலத்தோடு
உன் கனவுகளும் கடந்துவிடும்

பழைய பதிவுகள் »

வகைகள்